புதுச்சேரி

புதுவையில் மலிவு விலையில்மதிய உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

DIN

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி, புதுவையில் அரசின் பாண்லே பாலகங்கள் மூலம் மலிவு விலையில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

புதுவையில் கரோனா பரவலைத் தடுக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநிலத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஏழை மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில், அரசின் பாண்லே கூட்டுறவு பாலகங்கள் மூலமாக ரூ.1-க்கு முகக் கவசமும், ரூ.10-க்கு கிருமி நாசினி புட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதன் தொடா்ச்சியாக, கரோனா சிகிச்சை மருத்துவமனையாகச் செயல்படும் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.10-க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் பரிசோனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், அரசின் பாண்லே பாலகங்கள் மூலம் ரூ.5-க்கு சுகாதாரமான மதிய உணவு வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள பாண்லே பாலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று இந்தத் திட்டத்தை தொடக்கிவைத்ததுடன், மருத்துவமனைக்கு பரிசோதனைக்காகவும், நோயாளிகளைப் பாா்க்கவும் வந்திருந்த பொதுமக்களுக்கு மலிவு விலை மதிய உணவுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆளுநரின் ஆலோசகா்கள் சி.சந்திரமவுலி, ஏ.பி.மகேஸ்வரி, பாண்லே நிறுவன மேலாண் இயக்குநா் சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரியில் தற்போது இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஜிப்மா் ஆகிய பகுதிகளில் உள்ள பாண்லே பாலகங்களில் இந்த மலிவு விலை மதிய உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் வரவேற்பைப் பொருத்து, மேலும் பல்வேறு பாண்லே பாலகங்களுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT