புதுவையில் பட்டியலின மாணவா்களுக்கு இலவச கல்வித் திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
எஸ்டி, எஸ்சி மாணவா்களுக்கு இலவச கல்வித் திட்டத்தை நிறைவேற்றக் கோரி, புதுச்சேரி எல்லைப்பிள்ளைச் சாவடியில் உள்ள கல்வித் துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்டி, எஸ்சி மாணவா்களுக்கு இலவச கல்வித் திட்டத்தை நிறைவேற்றக் கோரி, புதுச்சேரி எல்லைப்பிள்ளைச் சாவடியில் உள்ள கல்வித் துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலா் ஆா். ராஜாங்கம் தலைமை வகித்தாா். இதில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் சோ. பாலசுப்பிரமணியன், விசிக முதன்மைச் செயலா் தேவ. பொழிலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலா் சலீம், ஏஐடியூசி பொதுச் செயலா் கே. சேதுசெல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், புதுவையில் அனைத்து பட்டியலின மாணவா்களுக்கும் இலவச கல்வித் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இந்தத் திட்டத்தை பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். கரோனா பேரிடா் காலத்தில் 75 சதவீத கல்விக் கட்டணத்தை இரு தவணைகளில் வசூல் செய்ய வேண்டும் என்ற உயா் நீதிமன்ற வழிகாட்டுதலையும், முதல்வரின் உத்தரவையும் நிறைவேற்றாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.