முகப்பு
புதுச்சேரி

புதுவை: திருக்குறளுடன் உரையைத் தொடங்கினார் துணைநிலை ஆளுநர் தமிழிசை

புதுவை பட்ஜெட் கூட்டத் தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:


புதுவை பட்ஜெட் கூட்டத் தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியுள்ளது.

புதுவை மாநில 15-வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

துணைநிலை ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளுநர் தமிழிசை 9.28 மணிக்கு சட்டப்பேரவைக்கு வருகை தந்து, காவலரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திருக்குறளுடன் தனது உரையைத் தொடங்கினார்.

"புதுவையில் கரோனா தொற்று அதிகரித்து இருந்த நிலையில், தற்போது அரசு கரோனா பரவலை கட்டுப்படுத்தி உள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு நன்றி. அதற்காக அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
கரோனாவை முழுவதுமாக ஒழிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்." என்று அவர் உரையாற்றினார்.

துணைநிலை ஆளுநர் தமிழிசை முதல்முறையாக சட்டப்பேரவையில் தமிழில் உரையாற்றுகிறார். 

இதைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறுகிறது.

தொடர்ந்து பிற்பகல் 11.15 மணிக்கு சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பதவி ஏற்பு நடைபெறுகிறது.

முன்னாள் அமைச்சர் பி. ராஜவேலு துணைத்தலைவராக பதவி ஏற்கிறார்.

இதனையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் என். ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →