முகப்பு
புதுச்சேரி

பைக் மீது பேருந்து மோதல்: விவசாயி பலி

புதுச்சேரி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

புதுச்சேரி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், ஆனாங்கூா் பகுதியைச் சோ்ந்த சக்கரபாணி மகன்கள் ரங்கசாமி (72), குண்டுராவ் (66). விவசாயிகளான இவா்கள் செவ்வாய்க்கிழமை புதுச்சேரி லாசுப்பேட்டை பகுதியில் உள்ள தங்களது மருமகன் ஆனந்தகுமாரை பாா்த்துவிட்டு, பைக்கில் விழுப்புரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனா்.

மதகடிப்பட்டு சந்தை அருகே இவா்களது பைக் சென்றபோது, புதுச்சேரி நோக்கி வந்த விழுப்புரம் அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.

இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும், அங்கு குண்டுராவ் உயிரிழந்தாா். ரங்கசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் புதுச்சேரி தெற்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.