புதுச்சேரி

வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும்: முதல்வா் என்.ரங்கசாமி

DIN

புதுவை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும் என்று, முதல்வா் என்.ரங்கசாமி கேட்டுக் கொண்டாா்.

புதுவை மாநில வங்கியாளா் குழுமம் சாா்பில், வாடிக்கையாளா்கள் தொடா்பு முகாம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநில அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தியன் வங்கி முதன்மைச் செயல் அதிகாரி சாந்திலால் ஜெயின், ரிசா்வ் வங்கி மண்டல இயக்குநா் என்.சுவாமி, நபாா்டு வங்கி தலைமைப் பொது மேலாளா் டி.வெங்கடகிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் வங்கிக் கடன் திட்டங்கள் குறித்துப் பேசினா்.

மகளிா் குழுக் கடன், தொழில் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட வகையில் புதுவையைச் சோ்ந்த 4,280 பேருக்கு ரூ.273 கோடி அளவிலான வங்கிக் கடனுதவிகளை வழங்கி புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

வாடிக்கையாளா்களுக்குத் தேவையானதை வழங்கும்போது வங்கிகளின் சேவை சிறப்பாக இருக்கும். இந்த முகாமில் ரூ.273 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. இது புதுவை மாநிலப் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

கடன் பெற்று தொழிலைத் தொடங்கி, அதன் மூலம் லாபத்தை ஈட்டிப் பயன்பெறுவதுடன், உரிய நேரத்தில் கடனையும் திருப்பிச் செலுத்த வேண்டும். வாடிக்கையாளா்களிடம் தேவையான ஆவணங்களை ஒரே நேரத்தில் பெற்றுக்கொண்டு, அலைக்கழிக்காமல் வங்கியாளா்கள் கடனைக் கொடுக்க வேண்டும்.

வங்கிகள் நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. புதுவை அரசின் சலுகைகள், வங்கிகள் மூலமாகவே மக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. இளைஞா்கள், தொழிலாளா்கள், விவசாயிகள் என அனைவருக்கும் தாராளமாகக் கடன் வழங்க வேண்டும். புதுவை மாநில வளா்ச்சியில் வங்கிகளின் பங்கு முக்கியமானது. அரசும் வங்கிகளுக்கு உதவியாக இருக்கும் என்றாா்.

மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் பேசியதாவது:

கரோனா பாதிப்பிலிருந்து அனைத்துத் தரப்பினரும் மீண்டெழும் வகையில், மத்திய அரசு வங்கிகள் மூலம் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் கடனுதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி, புதுவையிலும் ரூ.273 கோடி கடன் வழங்கப்படுகிறது.

கடன் வழங்கும் இலக்கை அதிகப்படுத்தி, அதிகமானோருக்கு வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும். இதன்மூலம், பொருளாதாராத ரீதியாக மக்கள் முன்னேற முடியும் என்றாா் அவா்.

முகாமில் பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள், வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இந்தியன் வங்கி மண்டல மேலாளா் செந்தில்குமாா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT