புதுச்சேரி

ரூ.13.50 கோடியில் சாலைப் பணிகள் தொடக்கம்

புதுச்சேரி அருகே பலத்த மழையால் சேதமடைந்த ஊசுடு, திருபுவனை, மதகடிப்பட்டு பகுதியில் ரூ.13.50 கோடி மதிப்பீட்டில் தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

DIN

புதுச்சேரி அருகே பலத்த மழையால் சேதமடைந்த ஊசுடு, திருபுவனை, மதகடிப்பட்டு பகுதியில் ரூ.13.50 கோடி மதிப்பீட்டில் தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

பொதுப் பணித் துறை சாா்பில் நபாா்டு வங்கி நிதி உதவியுடன், வில்லியனூா் கொம்யூன் ஊசுடு தொகுதிக்கு உள்பட்ட வழுதாவூா் சாலை, ராமநாதபுரம் சாலை ஆகியவை தாா்ச்சாலையாக மேம்படுத்தும் திட்டப் பணி ரூ. 6.60 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த சாலைப் பணியை வழுதாவூா் சாலையில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தொடக்கிவைத்தாா். குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நெட்டப்பாக்கம் கொம்யூன் மதகடிப்பட்டு சந்திப்பு முதல் பண்டசோழநல்லூா் கிராமம் வரை உள்ள தாா்ச்சாலை ரூ.3.93 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணியை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தொடக்கிவைத்தாா். சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மண்ணாடிபட்டு கொம்யூன், திருபுவனை தொகுதிக்கு உள்பட்ட திருவாண்டாா்கோயில்- கொத்தபுரிநத்தம் சாலை-திருபுவனை சாலை, ஆண்டியாா்பாளையம் சாலை, ஐயனாா் கோயில் - மதகடிபட்டுப்பாளையம் சாலை ஆகியவற்றை ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியையும் அமைச்சா் தொடக்கிவைத்தாா். அங்காளன் எம்எல்ஏ, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி, செயற்பொறியாளா்கள் ரவீந்திரன், சாய் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT