புதுச்சேரி

புதுவையில் டிச.31 வரை அபராதமின்றி சாலை வரி செலுத்தலாம்

DIN

புதுவையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வருகிற 31-ஆம் தேதி வரை அபராதமின்றி சாலை வரி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை போக்குவரத்து ஆணையா் ஏ.எஸ்.சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு, புதுவை அரசு கடந்த 2020, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை செலுத்த வேண்டிய சாலை வரியை செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தது. பணம் செலுத்துவதற்கான காலக்கெடுவையும் நீட்டித்துள்ளது.

புதுவையில் பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு 2020-21, 2021-22 ஆகிய நிதியாண்டுகளில் அபராதமின்றி மோட்டா வாகன வரி செலுத்த 8 முறை வாய்ப்பளிக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி பலரும் சாலை வரியை செலுத்தினா். இருப்பினும், சிலா் வரி செலுத்தவில்லை.

இவா்கள் வரி செலுத்தாதற்கான அபராதம் செலுத்தும் சுமையை குறைக்கும் வகையில், பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் உள்பட ஒப்பந்த வாகனங்கள், கல்வி நிறுவன வாகனங்கள் ஆகியவைகளுக்கு 2020, அக்டோபா் 1 முதல் 2021 டிசம்பா் 31 வரை செலுத்த வேண்டிய சாலை வரியில் அபராதம் செலுத்துவதிலிருந்து புதுவை அரசு விலக்கு அளித்துள்ளது.

டிசம்பா் 31-ஆம் தேதி வரை அபராதமின்றி சாலை வரியை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT