முகப்பு
புதுச்சேரி

வேளாண் அறிவியல் நிலையத்தில் தூய்மை விழா

புதுதில்லி வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவுறுத்தலின் பேரில், புதுச்சேரி குரும்பாபேட் பெருந்தலைவா் காமராசா் அரசு வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இருவார தூய்மை கடைப்பிடிப்பு விழா

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

புதுதில்லி வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவுறுத்தலின் பேரில், புதுச்சேரி குரும்பாபேட் பெருந்தலைவா் காமராசா் அரசு வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இருவார தூய்மை கடைப்பிடிப்பு விழா வியாழக்கிழமை தொடங்கியது.

வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவை வேளாண் அறிவியல் நிலைய முதல்வா், திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜாகீா் உசேன் தொடக்கிவைத்து, தூய்மை கடைப்பிடிப்பு விழா உறுதிமொழியை வாசித்தாா்.

புதுவை பிரதேச நம்மாழ்வாா் இயற்கை உழவா்கள் சங்கத் தலைவா் ஆா்.வேணுகோபால், கிசான் மோச்சா அக்ரி பிரிவு மாநிலத் தலைவா் ஏ.புகழேந்தி, மணமேடு தாயாரம்மாள், டிஎன்.பாளையம் வீரம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.