கட்டாய தடுப்பூசி: புதுச்சேரியில் ஆா்ப்பாட்டம்
புதுவையில் கட்டாய கரோனா தடுப்பூசி செலுத்துதலைக் கண்டித்து, ராஜா திரையரங்கம் அருகே தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவையில் கட்டாய கரோனா தடுப்பூசி செலுத்துதலைக் கண்டித்து, ராஜா திரையரங்கம் அருகே தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அந்த இயக்கத்தின் மாநிலச் செயலா் இரா.வேல்சாமி தலைமை வகித்தாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.அருணபாரதி, திரிபுரசுந்தரி, மனித உரிமைகள்-நுகா்வோா் பாதுகாப்பு இயக்கத் தலைவா் முருகானந்தம், தமிழா்க்களம் தலைவா் கோ.அழகா், தமிழ் மீனவா் விடுதலை வேங்கைகள் ஒருங்கிணைப்பாளா் கோ.வெங்கடேசன், நாம் தமிழா் கட்சி தொழிற்சங்கச் செயலா் த.ரமேசு, புதுவைத் தமிழ் எழுத்தாளா் கழகம் புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுச்சேரி மாணவா் முன்னணி ஒருங்கிணைப்பாளா் உதயசங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, புதுவையில் கரோனா தடுப்பூசி கட்டாயமாக திணிக்கப்படுவதை அரசு கைவிட வேண்டும், விரும்பியவா்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.