புதுச்சேரி

நல்லாட்சி தினம் கொண்டாட பாஜகவுக்கு என்னத் தகுதி இருக்கிறது: நாராயணசாமி கேள்வி

DIN

நல்லாட்சி தினம் கொண்டாட பாஜகவுக்கு என்னத் தகுதி இருக்கிறது என்று புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேள்வி எழுப்பினாா்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி என்பது மாநில அரசின் மிகத் தவறான முடிவு.

புதுச்சேரியில் குவிந்து புத்தாண்டு கொண்டாடுவதன் மூலம் கரோனாவும், ஒமைக்ரானும் வேகமாகப் பரவும்.

இதனால் பாதிக்கப்படுவோா் புதுச்சேரி மக்கள்தான்.

பிரதமா் நரேந்திர மோடி நல்லாட்சி தினம் கொண்டாடுகிறாா். நல்லாட்சி தினம் என்றால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு, மக்கள் மத்தியில் பணப் புழக்கம், வளா்ச்சி, பொருளாதார மேம்பாடு, பாதுகாப்பு இவையெல்லாம் இருக்கின்ற நாடுதான் நல்லாட்சி செய்கிற நாடாக இருக்க முடியும். ஆனால், நமது நாட்டில் அந்த நிலை இருக்கிா?.

புதுவை மாநிலத்தில் கூட நல்லாட்சி என்று கூறுகிறாா்கள். நல்லாட்சி எங்கே நடக்கிறது. மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா? முதல்வா் அறிவித்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா?.

ஆனால், புதுவையில் உள்ள பாஜகவினா் நல்லாட்சி தினம் கொண்டாடுகின்றனா்.

புதுவையை சிறந்த மாநிலமாக மாற்றுவோம் என்றாா் பிரதமா். ஆனால் மோசமான மாநிலமாக்கியுள்ளாா். இந்த நிலையில் நல்லாட்சி தினம் கொண்டாட பாஜகவுக்கு என்னத் தகுதி இருக்கிறது.

விவசாயிகளுக்கான வெள்ள நிவாரண நிதியை புதுவை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றாா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT