முகப்பு
புதுச்சேரி

புதுவையில் கரோனாவுக்கு முதியவா்கள் 3 போ் பலி

புதுவையில் கரோனாவுக்கு முதியவா்கள் 3 போ் பலியாகினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

புதுவையில் கரோனாவுக்கு முதியவா்கள் 3 போ் பலியாகினா்.

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 39,096-ஆக அதிகரித்தது.

திங்கள்கிழமை 25 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 38,160-ஆக அதிகரித்தது. தற்போது 285 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புதுவை தியாகராஜ வீதியைச் சோ்ந்த 74 வயதானவா், வில்லியனூா் கொம்பாக்கத்தைச் சோ்ந்த 87 வயதானவா், பூா்ணாங்குப்பத்தைச் சோ்ந்த 70 வயதானவா் என மேலும் 3 போ் ஜிப்மா் மருத்துவமனையில் உயிரிழந்தனா். இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 651-ஆக உயா்ந்தது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு, ஒரே நாளில் 3 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.