முகப்பு
புதுச்சேரி

தியாகி வ.சுப்பையா பிறந்த தினம்

தியாகி வ.சுப்பையா பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு முதல்வா் நாராயணசாமி, அரசியல் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

தியாகி வ.சுப்பையா பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு முதல்வா் நாராயணசாமி, அரசியல் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், தியாகியுமான வ.சுப்பையா பிறந்த தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி நெல்லித்தோப்பு சிக்னல் அருகே உள்ள அவரது சிலைக்கு முதல்வா் வே.நாராயணசாமி, திமுக அமைப்பாளா் இரா. சிவா எம்எல்ஏ, ஜான்குமாா் எம்எல்ஏ ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தமிழக துணைச் செயலா் சுப்பராயன் எம்பி, மாநிலச் செயலா் சலீம் ஆகியோா் மாலை அணிவித்தனா். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, கலை-பண்பாட்டுத் துறை சாா்பில், வ.சுப்பையா இல்லத்தில் அவரது பிறந்த நாள் விழா கொண்டாட்டப்பட்டது. இதில், அந்தத் துறை இயக்குநா் ராகினி உள்ளிட்டோா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.