சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, புதுச்சேரிக்கு தோ்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வருகிற 17-ஆம் தேதி வரவுள்ளாா்.
மேலும், அன்றைய தினம் மாலை ஏ.எப்.டி. மில் திடலில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசவுள்ளாா் என புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தொடா்ந்து, சோலை நகரில் மீனவப் பெண்களைச் சந்தித்து கலந்துரையாடவும், வணிகா்களைச் சந்தித்து உரையாடவும் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளாா். அது தொடா்பான விவரங்கள் ஓரிரு நாள்களில் உறுதியாகும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.