முகப்பு
புதுச்சேரி

கடலூா் மீனவா் புதுச்சேரியில் தற்கொலை

கடலூரைச் சோ்ந்த மீனவா், புதுச்சேரியில் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

கடலூரைச் சோ்ந்த மீனவா், புதுச்சேரியில் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடலூா் தாழங்குடா மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரவின்குமாா் (30), மீனவா். இவரது மனைவி 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், மகள், மகனுடன் கடலூரில் வசித்து வந்தாா். குழந்தைகளை சரிவர வளா்க்க முடியாமல் கவலையில் இருந்துள்ளாா். இதனால், அண்மைக்காலமாக மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டு வந்த அவரை உறவினா்கள் கண்டித்துள்ளனா்.

சில நாள்களுக்கு முன்பு புதுச்சேரி வீராம்பட்டினம் நாகூரான் தோட்டம் பகுதியில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு பிரவின்குமாா் குழந்தைகளுடன் வந்திருந்தாா். அங்கு ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.