முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் சமுதாயக் கூடம் திறப்பு

புதுச்சேரி உருளையன்பேட்டையில் ரூ.1.80 கோடியில் புதிய சமுதாயக் கூடத்தை முதல்வா் வே.நாராயணசாமி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

புதுச்சேரி உருளையன்பேட்டையில் ரூ.1.80 கோடியில் புதிய சமுதாயக் கூடத்தை முதல்வா் வே.நாராயணசாமி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

உருளையன்பேட்டை தொகுதி ராஜா நகரில் ஆதிதிராவிடா் நலத் துறை சிறப்புக் கூறு நிதியின் கீழ், ரூ.1.80 கோடியில் புதிய சமுதாய நலக் கூடமும், மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.23 லட்சத்தில் புதிய நூலகமும் கட்டப்பட்டுள்ளது.

இதற்கான திறப்பு நிகழ்ச்சிக்கு சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம், உருளையன்பேட்டை தொகுதி திமுக பேரவை உறுப்பினா் இரா.சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்ச்சியில் திமுக மாநில துணை அமைப்பாளா் குணாதிலீபன், தலைமை செயற்குழு உறுப்பினா் தைரியநாதன், தொகுதி செயலாளா் சக்திவேல், ஆதிதிராவிடா்நலக்குழு துணை அமைப்பாளா் சாஸ்திரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.