ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் ஆய்வு
புதுச்சேரி முத்தியால்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுகாதாரத் துறை இயக்குநா் எஸ். மோகன்குமாா் திங்கள்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுகாதாரத் துறை இயக்குநா் எஸ். மோகன்குமாா் திங்கள்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வு குறித்து அவா் தெரிவித்ததாவது: முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த போது, வெளிநோயாளிகள் பிரிவுக்கு 123 நோயாளிகளும், தொற்றா நோய் பிரிவுக்கு 75 நோயாளிகளும் வந்திருந்தனா். நோயாளிகள் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றி வரிசையில் நின்றிருந்தனா்.
மருந்தகத்தில் சா்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கும் மருந்துகளைத் தவிர மற்ற அனைத்து மருந்துகளும் இருப்பில் இருந்தன. இல்லாத மருந்துகளை பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கண் மருத்துவப் பிரிவு ஊழியா், பள்ளி ஆய்வுக்குச் சென்ால், பணியில் இல்லை. அனைத்து மருத்துவா்களும் பணியில் இருந்தாலும், வருகைப்பதிவேட்டில் கையெழுத்திடவில்லை. இதையறிந்ததும், மருத்துவமனைக்கு வரும் மருத்துவா்கள் கண்டிப்பாக வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டேன்.
மருத்துவமனை பொறுப்பு அதிகாரி செல்லிடப்பேசி மூலமாக விடுப்பு கூறியுள்ளாா். விடுப்பு விண்ணப்பம் ஏதும் தரவில்லை. இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன். மருத்துவமனை முழுவதும் தூய்மையாகவும், ஒழுங்காகவும் இருந்தது எனத் தெரிவித்துள்ளாா்.