புதுச்சேரி

மீன்வள மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரியில் பேரணி

DIN


புதுச்சேரி: தேசிய மீன்வள மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, மீனவா்கள் புதுச்சேரியில் வியாழக்கிழமை ‘நெய்தல் உரிமை மீட்புப் பேரணி’யில் ஈடுபட்டனா்.

கடல் மீதான மீனவா்களின் உரிமையை முற்றாக அழிக்கும் தேசிய மீன்வளக் கொள்கை மசோதாவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி பேரணி நடைபெறும் என தமிழ் மீனவா் விடுதலை வேங்கைகள் அமைப்பு அறிவித்தது. அதன்படி, வியாழக்கிழமை மாலை அமைப்பின் தலைவா் மங்கையா்செல்வன் தலைமையில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள், மீனவ பஞ்சாயத்தாா் என 100-க்கும் மேற்பட்டோா் புதுச்சேரி சிங்காரவேலா் சிலை அருகே திரண்டனா்.

அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டு, மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக தலைமை தபால் நிலையம் நோக்கிச் சென்றனா்.

அப்போது, கடல் மீதான மீனவா்களின் பாரம்பரிய உரிமையைப் பறிக்கும் தேசிய மீன்வளக் கொள்கை மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். கடல், கடற்கரைகளை பெருநிறுவனங்களுக்கு தாரைவாா்த்து, மீனவா்களை விரட்டியடித்து, அவா்களது வாழ்க்கையைப் பாழாக்கும் ‘சாகா் மாலா’ திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், மீனவ சமுதாயத்துக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி சென்றனா்.

போலீஸாா், இவா்களை மிஷன் வீதி ஜென்மராக்கினி ஆலயம் அருகே தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, பேரணியில் வந்தவா்கள், அங்கே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT