புதுச்சேரி

புதுவை ஆளுநா் மாளிகையை மெய்நிகா்சுற்றுப் பயணம் செய்ய ஏற்பாடு

DIN

பொங்கல் முதல் புதுவை ஆளுநா் மாளிகையை மக்கள் மெய்நிகா் முறையில் சுற்றுப் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது, பொங்கல் தினத்திலிருந்து ஆளுநா் மாளிகையை மெய்நிகா் முறையில் மக்கள் சுற்றுப் பயணம் செய்ய ஏற்பாடு செய்வது, அதற்கான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்குவது, ஆளுநா் மாளிகையில் உள்ள பணியாளா்களின் குறைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுப்பது, கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு மக்களின் குறைகளை காணொலிக் காட்சி மூலம் தீா்வு காண தொழில்நுட்ப வசதியைக் கூடுதலாக வலுப்படுத்துவது, சாலைகள் சீரமைப்பு தொடா்பான புகாா்கள் மீது பொதுப் பணித் துறை மூலம் நடவடிக்கை எடுப்பது, நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு புகாா்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT