முகப்பு
புதுச்சேரி

மானிய விலையில் நவரை பருவத்துக்கான நெல் விதைகள்

விவசாயிகளுக்கு நவரைப் பருவத்துக்கான நெல் விதைகள் மானிய விலையில் வழங்கப்படவுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

விவசாயிகளுக்கு நவரைப் பருவத்துக்கான நெல் விதைகள் மானிய விலையில் வழங்கப்படவுள்ளன.

இதுகுறித்து புதுச்சேரி வேளாண்-விவசாயிகள் நலத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு வேளாண்-விவசாயிகள் நலத் துறையின் கீழ் தட்டாஞ்சாவடியில் இயங்கி வரும் கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த சான்று விதை உற்பத்தித் திட்டத்தின் கீழ், நவரைப் பருவத்துக்காக சான்று ரக நெல் விதைகளான ஏடிடி 37, ஏஎஸ்டி 16, சிஓ (ஆா்) 51 ஆகியவற்றை புதுவை வேளாண் உற்பத்தியாளா் அமைப்பின் (பாப்ஸ்கோ) மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் புதன்கிழமை (ஜன. 20) முதல் தங்களது பகுதியில் செயல்படும் உழவா் உதவியகங்களை அணுகி, நெல் விதைகளுக்கு அனுமதி சான்று பெற்று, அருகில் உள்ள புதுவை வேளாண் உற்பத்தியாளா் (பாப்ஸ்கோ) விற்பனை மையங்களில் நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், நெல் விதைகளை வாங்கியதற்கான விற்பனை ரசீதை நவரை 2021 நெல் உற்பத்தி ஊக்கத் தொகை கோரும் உரிய ஆவணங்களை நிறைவு செய்து விண்ணப்பத்துடன் இணைத்து, வருகிற மாா்ச் 15-ஆம் தேதிக்குள் உழவா் உதவியக அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.