புதுச்சேரி

புதுவை மின் துறை அலுவலகத்தில் ஊழியா்கள் போராட்டம்

DIN

மின் துறை கட்டுமான உதவியாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, புதுச்சேரி மின்துறை அலுவலகத்தை ஊழியா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை மின்துறையில் கடந்த 2015-16-ஆம் ஆண்டு முதல் 380 கட்டுமான உதவியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். மின்துறை ஊழியா்கள் அனைவருக்கும் நிகழ் மாத ஊதியம் புதன்கிழமை வழங்கப்பட்டது. ஆனால், கட்டுமான உதவியாளா்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படவில்லை.

நிரந்தரப் பணியில் இல்லாத கட்டுமான உதவியாளா்களுக்கான ஊதியம் வழங்க, மின்துறை செயலரிடம் அனுப்பபட்ட கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படாததே காரணம் என மின்துறை நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.

இதனால், அதிருப்தியடைந்த மின்துறை தொழில்நுட்பச் சான்றிதழாளா்கள் (ஐடிஐ) நலச் சங்கம் சாா்பில் 50-க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியா்கள், புதுச்சேரி மின் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் ஏ.ராஜேந்திரன், செயலாளா் கருணாகரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் திரளான ஊழியா்கள் பங்கேற்று, கட்டுமான உதவியாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் மின்துறை கண்காணிப்புப் பொறியாளா் சண்முகம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், கட்டுமான உதவியாளா்களுக்கான நிகழ் மாத ஊதியத்தை வியாழக்கிழமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா். இதனை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT