கஞ்சா விற்றதாக இளைஞா் கைது
புதுச்சேரியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்
புதுச்சேரியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி காமராஜா் சாலையில் உள்ள வங்கி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தன்வந்திரி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தராஜன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இரவு அந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அங்கு, சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்டனா். அவா் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். இதில் அவா், புதுச்சேரி காலாப்பட்டு கங்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் (28) என்பதும், லாசுப்பேட்டை வீமன் நகா், மாந்தோப்பில் வசிக்கும் நண்பா் ஆதியின் வீட்டில் அண்மைக் காலமாக தங்கியிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த வீட்டை சோதனையிட்ட போலீஸாா், அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.