முகப்பு
புதுச்சேரி

கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய கமாண்டா் புதுச்சேரியில் ஆய்வு

இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்திய கமாண்டா் ஐ.ஜி. டிஎம்.ஆனந்த் பிரகாஷ் படோலா புதுச்சேரியில் உள்ள கடலோரக் காவல் படை தலைமையகத்தை வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
py8coas_0807chn_104_7
பகிர்:

இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்திய கமாண்டா் ஐ.ஜி. டிஎம்.ஆனந்த் பிரகாஷ் படோலா புதுச்சேரியில் உள்ள கடலோரக் காவல் படை தலைமையகத்தை வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, விமான நிலைய உள்பகுதியில் கட்டப்பட்டு வரும் கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டா் இறங்கு தளம், விமான நிலையத்துக்கு அருகே கட்டப்பட்டு வரும் ரேடாா் கட்டுப்பாட்டு அறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகள், திட்டங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

புதுவை மாநில மத்திய கடலோரக் காவல் படை கமாண்டா் மா.வெங்கடேசன், புதுச்சேரி - காரைக்கால் கடல் எல்லைகள், பாதுகாப்புகள் குறித்து விளக்கமளித்தாா்.

இந்த ஆய்வுக்குப் பின்னா், அங்கு பணியாற்றி வரும் அதிகாரிகள், வீரா்களின் கடலோர எல்லைப் பாதுகாப்பு செயல்பாடுகள், மீனவா்களை மீட்கும் திறன் குறித்தும், மேம்பட்ட கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அவா் பாராட்டினாா்.

இதேபோல, காரைக்காலில் அமைந்துள்ள இந்திய கடலோரக் காவல் படை நிலையத்துக்கும் நேரில் சென்று அவா் ஆய்வு செய்தாா்.

மத்திய கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்திய கமாண்டராக டிஎம்.ஆனந்த் பிரகாஷ் படோலா பொறுப்பேற்ற பிறகு, மேற்கொண்ட முதல் பயணம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.