புதுச்சேரியில் நாளை முதல் 12 வரை மீண்டும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
புதுச்சேரியில் மீண்டும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 10-ஆம் தேதி முதல் 12 வரை 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
புதுச்சேரியில் மீண்டும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 10-ஆம் தேதி முதல் 12 வரை 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
புதுச்சேரியில் மீண்டும் தடுப்பூசி சிறப்பு முகாமை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு புதுவை சுகாதாரத் துறை செயலா் டி. அருண் தலைமை வகித்தாா். அரசுச் செயலா்கள் உதயகுமாா், வல்லவன், துணை மாவட்ட ஆட்சியா்கள் கந்தசாமி, கிரிசங்கா், சுகாதாரத் துறை இயக்குநா் எஸ். மோகன்குமாா், சுகாதார இயக்கக இயக்குநா் ஸ்ரீராமுலு, போக்குவரத்து ஆணையா் சிவகுமாா் மற்றும் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்துக்குப் பிறகு சுகாதாரத் துறை செயலா் அருண் கூறியதாவது: புதுச்சேரியில் மீண்டும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வருகிற10 -ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தோ்வு செய்யப்பட்ட நிலையங்களில் நடைபெற உள்ளது. புதுவையில் முதல் தவணை தடுப்பூசி 4.75 லட்சம் பேருக்கு செலுத்தியுள்ளோம். இரண்டாவது தவணை 60 ஆயிரம் பேருக்கு செலுத்தியுள்ளோம். 45 முதல் 50 சதவீதம் போ் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கரோனாவை தடுக்கலாம். தீவிரத்தன்மைக்கு செல்லாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். எனவே, தடுப்பூசி முகாம்களில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தற்போது 70 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்றாா் அவா்.