புதுவையில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
புதுவை மாநிலத்திலும் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஏழை மாணவா்கள் பயில வகை செய்யும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென அதிமுக வலியுறுத்தியது.
புதுவை மாநிலத்திலும் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஏழை மாணவா்கள் பயில வகை செய்யும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென அதிமுக வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலா் அ.அன்பழகன் வியாழக்கிழை முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து அளித்த மனு: நாடு முழுவதும் கடந்த 2009-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத ஒரே மாநிலம் புதுவை மட்டும்தான். தமிழகத்தில் மறைந்த முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இந்தச் சட்டத்தை அமல்படுத்தி, பல லட்சம் மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா். புதுவை மாநிலத்தில் நிகழ் கல்வியாண்டில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் விரைவில் நியமிக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினா் பதவியை கூட்டணிக் கட்சிகளிடம் கோருவது குறித்து அதிமுக மேலிடம் முடிவு செய்யும். வாரியத் தலைவா் நியமனங்களில் அதிமுகவுக்கு உரிய வாய்ப்பளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுப்போம் என்றாா் அவா்.