முகப்பு
புதுச்சேரி

பாதுகாப்புத் துறையை தனியாா் மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து புதுச்சேரியில் ஆா்ப்பாட்டம்

பாதுகாப்புத் துறையை தனியாா்மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

பாதுகாப்புத் துறையை தனியாா்மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, நாட்டின் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் தளவாட தொழிற்சாலைகளைப் பிரித்து, தனியாா்மயப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மேலும், பாதுகாப்புத் துறை ஊழியா்கள், தொழிலாளா்களை அடக்கியாலும் நோக்கில் பாதுகாப்புத் துறையில் வேலைநிறுத்தத்தை தடை செய்யும் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பாதுகாப்புத் துறை சங்கங்கள் ஜூலை 8-ஆம் தேதியை கருப்பு தினமாகக் கடைப்பிடித்தனா். பாதுகாப்புத் துறை தொழிலாளா்களுக்கு ஆதரவாக, மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில், நாடு தழுவிய கண்டன இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அதன்படி, புதுச்சேரி மிஷன் வீதி வ.உ.சி. பள்ளி அருகே ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி, எல்.எல்.எப், எம்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில், கருப்பு கொடியேந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐடியூசி மாநிலப் பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் தலைமை வகித்தாா். சிஐடியூ பிரதேச செயலா் எ.சீனுவாசன், ஐஎன்டியூசி மாநிலப் பொதுச் செயலா் ஞானசேகரன், ஏஐசிசிடியூ பொதுச் செயலா் புருஷோத்தமன், எல்எல்எப் மாநிலச் செயலா் செந்தில், எம்எல்எப் மாநிலச் செயலா் வேதா.வேணுகோபால், ஏஐயூடியூசி மாநிலச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.