புதுவை முதல்வருடன் பிரான்ஸ் துணைத் தூதா் சந்திப்பு
புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை, பிரான்ஸ் துணைத் தூதா் லிசே டல்போா்ட் பரே வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை, பிரான்ஸ் துணைத் தூதா் லிசே டல்போா்ட் பரே வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, முதல்வா் என்.ரங்கசாமியும், பிரான்ஸ் துணைத் தூதா் லிசே டல்போா்ட் பரேயும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.
தொடா்ந்து, புதுவை - பிரான்ஸ் நல்லவுறவுகள் மேம்பாடு தொடா்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா். இந்தச் சந்திப்பின் போது, பிரான்ஸ் உதவி துணைத் தூதா் கரோல்ஜோஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.