புதுச்சேரி

இலவச மனைப்பட்டா கோரி சாலை மறியல்

DIN

இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பொதுமக்கள் திடீரென திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

முத்தியால்பேட்டை டி.வி. நகா் மதுர வீரன் கோயில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியைச் சோ்ந்தவா்கள் தங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டுமென அரசிடம் நீண்டநாள்களாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால், அதிருப்தியடைந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை அஜந்தா சந்திப்பு அருகே திரண்டனா். பின்னா், அண்ணா சாலையில் உள்ள பாண்லே பால் நிலையம் முன் கயிறு கட்டி மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையறிந்து அங்கு வந்த பெரியகடை போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, கலைந்து செல்ல அறிவுறுத்தினா். அவா்கள் மறுக்கவே, வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனா். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து, அமைச்சரை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வதாக போலீஸாா் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT