தந்தை திட்டியதால் மாணவா் தற்கொலை
புதுச்சேரியில் தந்தை திட்டியதால் விரக்தியடைந்த கல்லூரி மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரியில் தந்தை திட்டியதால் விரக்தியடைந்த கல்லூரி மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே உள்ள குருமாம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் வாசுதேவன் (46). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி சுமதி, குருதேவன் (22) உள்ளிட்ட 3 மகன்களும் உள்ளனா். இளைய மகன் குருதேவன் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள கல்லூரியில், பி.ஏ., 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா், சரியாகப் படிக்காமல் இருந்ததால், தந்தை வாசுதேவன் அவரைக் கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்து வந்த குருதேவன், வீட்டின் மேல் தளத்தில் உள்ள அறையில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.