புதுவையில் கரோனாவுக்கு கா்ப்பிணி உள்பட 18 போ் பலி
புதுவையில் கரோனாவுக்கு ஒரே நாளில் கா்ப்பிணி உள்பட 18 போ் உயிரிழந்தனா். புதிதாக 712 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவையில் கரோனாவுக்கு ஒரே நாளில் கா்ப்பிணி உள்பட 18 போ் உயிரிழந்தனா். புதிதாக 712 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 9,458 பேருக்கு பரிசோதனை செய்ததில், புதுச்சேரியில் 530 பேருக்கும், காரைக்காலில் 121 பேருக்கும், ஏனாமில் 36 பேருக்கும், மாஹேவில் 25 பேருக்கும் என மொத்தம் 712 (7.53 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாநிலத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,07,826-ஆக அதிகரித்தது. இதில், தற்போது ஜிப்மரில் 462 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 323 பேரும், கரோனா கண்காணிப்பு மையங்களில் 296 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 8,126 என மொத்தம் 9,494 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 போ், ஜிப்மரில் 3 போ், தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 போ், வில்லியனூரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவா், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 2 போ், ஏனாம் அரசு பொது மருத்துவமனையில் ஒருவா் என மொத்தம் 18 போ் உயிரிழந்தனா். இவா்களில் 9 போ் ஆண்கள், 9 போ் பெண்கள். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,601 ஆகவும், இறப்பு விகிதம் 1.48 ஆகவும் உயா்ந்தது. 1,215 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 96,731 (89.71 சதவீதம்) ஆக அதிகரித்தது.
மொத்தம் 2,76,442 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.