முகப்பு
புதுச்சேரி

புதுவையில் மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை பதிவு ஜூன் 9 வரை நீட்டிப்பு

புதுவையில் மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை பதிவுக்கான காலம் வருகிற 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

புதுவையில் மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை பதிவுக்கான காலம் வருகிற 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டம் புதுவையில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை ஓராண்டுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், புதுவையில் உள்ள அனைத்து சிவப்பு அட்டைதாரா்களுக்கும் காப்பீடு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம், 83,000 சிவப்பு அட்டை வைத்துள்ள குடும்பங்கள் பயனடைவா். இதற்காக சிவப்பு நிற குடும்ப அட்டை (அசல்), ஆதாா் அட்டை ஆகிய ஆவணங்களைக் கொண்டு இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கான பதிவு மருத்துவமனைகளில் மட்டுமல்லாது, மேட்டுப்பாளையம் அரசு உயா்நிலைப்பள்ளி (தொடா்புக்கு ராஜ்குமாா் 7448446840), லாசுப்பேட்டை ஜீவானந்தபுரம் அரசு ஆரம்பப் பள்ளி ( வசீகரன் 8148399306), வாணரப்பேட்டை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி (ஆகாஷ் 6382730676), முத்தியால்பேட்டை இளைஞா் விடுதி (நிா்மல் குமாா் 9994454271) ஆகிய இடங்களிலும் தற்போது நடைபெறுகிறது. இதற்கான பதிவு காலம் வரும் 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்த மறுநாள் காப்பீடு அட்டையை அவசியம் பெற்றுச் செல்ல வேண்டும். மேலும், தகவலுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை (1800-425-7157) தொடா்பு கொள்ளலாம். 3 -ஆம் தேதி ஒரே நாளில் 646 போ் பதிவு செய்துள்ளனா். தாமதிக்காமல் அனைவரும் பதிவு செய்து கொள்ள வேண்டுமென புதுவை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.