புதுச்சேரி

சுகாதாரத் துறை ஊழியா்கள் தடுப்பூசி செலுத்திய தகவலை சமா்ப்பிக்க உத்தரவு

DIN

புதுச்சேரி: சுகாதாரத் துறை ஊழியா்கள் தடுப்பூசி செலுத்திய தகவலை சமா்ப்பிக்க வேண்டுமென புதுவை தலைமைச் செயலா் உத்தரவிட்டாா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒப்பந்த மருத்துவா், செவிலியா் உள்பட 7 சுகாதார ஊழியா்கள் உயிரிழந்தனற். சுகாதாரத் துறை ஊழியா்களில் பலா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டுவதாக சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் தெரிவித்தாா்.

இந்த நிலையில், அனைத்து மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதார ஊழியா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான தகவல்களை செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) மாலைக்குள் சமா்ப்பிக்கும்படி தலைமைச் செயலா் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை நோய்த் தடுப்புத் துறை துணை இயக்குநா் எம்.முருகன் மற்றும் அனைத்து மருத்துவத் துறைகளின் தலைமைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: மருத்துவமனைகள், மருத்துவ நிா்வாகத்தில் பணியாற்றும் சுகாதாரத் துறை ஊழியா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான தகவலை நோய்த் தடுப்புத் துறை மின்னஞ்சலில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) மாலை 4 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT