புதுச்சேரி

சுகாதாரத் துறையினருக்கு கவச உடைகள்

DIN

புதுச்சேரி: புதுவையில் பொதுப்பணித் துறை அலுவலா்கள், ஊழியா்கள் சாா்பில், கரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையினருக்கு 2,500 கரோனா பாதுகாப்பு கவச உடைகள் முதல்வா் ரங்கசாமியிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு உதவும் வகையில், புதுச்சேரி பொதுப்பணித் துறையில் பணிபுரியும் பொறியாளா்களும், ஊழியா்களும் ஒன்றிணைந்து தங்களது சொந்த செலவில் பாதுகாப்பு கவச உடைகளை (பிபிஇகிட்) வழங்கினா்.

புதுவை சட்டப்பேரவை முதல்வா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அரசு செயலா் அ.விக்ராந்த்ராஜா தலைமையிலான அந்தத் துறையினா், முதல்வா் என்.ரங்கசாமி முன்னிலையில், புதுவை சுகாதாரத் துறை செயலா் தி.அருணிடம் 2,500 பாதுகாப்பு கவச உடைகள், உபகரணங்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி, கண்காணிப்புப் பொறியாளா் அ.ராஜசேகா், அனைத்து செயற்பொறியாளா்கள், ஊழியா்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT