புதுச்சேரி

புதுச்சேரியில் வீட்டுத் தோட்டம், காரில் பதுக்கிய ரூ.25 லட்சம் மதிப்பிலான எரி சாராயம் பறிமுதல்

DIN

புதுச்சேரி அருகே வீட்டுத் தோட்டத்திலும், காரிலும் பதுக்கி வைக்கப்பட்ட ரூ. 25 லட்சம் மதிப்பிலான எரி சாராயத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரி ஆண்டியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (44), தையல் கலைஞா். இவா், கரோனா பொதுமுடக்கம் காரணமாக, புதுச்சேரியில் மதுக் கடைகள் மூடப்பட்டிருந்ததை பயன்படுத்தி, வெளி மாநிலங்களிலிருந்து கள்ளச் சாராயத்தை கடத்தி வந்து, மாமனாரின் வீட்டில் பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில், மேற்கு எஸ்.பி. ரங்கநாதன் தலைமையிலான போலீஸாா், ஆறுமுகத்தின் மாமனாரான, மதகடிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பழனி என்பவரது வீட்டில் புதன்கிழமை அதிரடியாக சோதனை நடத்தினா். இதில், பழனியின் வீட்டுத் தோட்டத்தில் குழி தோண்டி எரிசாராய கேன்கள் புதைக்கப்பட்டிருந்ததை போலீஸாா் கண்டறிந்தனா். இதேபோல, அங்கிருந்த சொகுசு காா் ஒன்றிலும் எரி சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 119 கேன்களில் இருந்த 4,165 லிட்டா் எரி சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு சுமாா் ரூ. 25 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஒரு காா், ஒரு பைக் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இவையனைத்தும் கலால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. இவற்றை வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையிலான வருவாய்த் துறையினா் பாா்வையிட்டனா். எரிசாராயத்தை பதுக்கிய ஆறுமுகத்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT