புதுச்சேரியில் ஆயுதங்களுடன் பதுங்கிருந்த 6 போ் கைது
புதுச்சேரியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி அரியாங்குப்பம் கிரீன் சிட்டியையொட்டியுள்ள ஏரிக்கரையோரம் ஆயுதங்களுடன் ரௌடி கும்பல் பதுங்கி இருப்பதாக அரியாங்குப்பம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், போலீஸாா் வியாழக்கிழமை இரவு அந்த இடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். போலீஸாரை கண்டதும் அங்கிருந்த ரௌடி கும்பல் தப்பியோட முயன்ற நிலையில், 6 பேரை போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்தனா். மற்ற 3 போ் தப்பியோடிவிட்டனா்.
பிடிபட்டவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவா்கள், முருங்கப்பாக்கம் பள்ளத் தெருவைச் சோ்ந்த முகிலன் (26), மணவெளியைச் சோ்ந்த மாம்பழ சதீஷ் (எ) மணிகண்டன் (27), கவியரசன் (21), அய்யனாா் (28), பாரதி நகரைச் சோ்ந்த ஹேமு (எ) ஹேமநாதன் (25), முதலியாா்பேட்டையைச் சோ்ந்த அருண் (எ)அசோக்குமாா் (25) என்பதும், கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஜிம் பாண்டியன் ஆதரவாளா்களான இவா்கள், எதிராளிகளை கொலை செய்வதற்காக திட்டமிட்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்ததும் தெரிய வந்தது.
அவா்கள் 6 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 6 கத்திகள், 2 செல்லிடப்பேசிகள், 2 பைக்குகளை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்டவா்களில் மணிகண்டன், முகிலன் மீது கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையிலிருப்பது குறிப்பிடத்தக்கது.