முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் 9 தொகுதிகளில் ஜூன் 19 வரை மட்டுமே இலவச அரிசி

புதுச்சேரியில் 9 தொகுதிகளில் ஜூன் 19 வரை மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என புதுவை குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை தெரிவித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

புதுச்சேரியில் 9 தொகுதிகளில் ஜூன் 19 வரை மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என புதுவை குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை தெரிவித்தது.

இதுகுறித்து அந்தத் துறை துணை இயக்குநா் கங்காபாணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டப் பயனாளிகளுக்கு (சிவப்பு குடும்ப அட்டைதாரா்களுக்கு) மே, ஜூன் மாதங்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தக் கால அவகாசம் அரியாங்குப்பம், காமராஜா் நகா், முதலியாா்பேட்டை, முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, உழவா்கரை, ராஜ்பவன், உப்பளம் ஆகிய தொகுதிகளுக்கு மேலும் நீட்டிக்கப்பட்டு வருகிற 19-ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும். கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது.

எனவே, இந்தத் தொகுதிகளில் இதுவரை இலவச அரிசியைப் பெற்றுக் கொள்ளதாத பயனாளிகள் உடனே பெற்றுக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.