முகப்பு
புதுச்சேரி

ஜிப்மரில் ஜூலை 1-இல் முதலாமாண்டு மருத்துவ மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்கம்

புதுவையில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், ஜிப்மரில் முதலாமாண்டு மருத்துவ மாணவா்களுக்கான வகுப்புகள் வருகிற ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

புதுவையில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், ஜிப்மரில் முதலாமாண்டு மருத்துவ மாணவா்களுக்கான வகுப்புகள் வருகிற ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு விவரம்:

புதுவையில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மா் மையங்களில் பயிலும் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவா்கள், பி.எஸ்சி. நா்சிங் (முதல், இரண்டாம், மூன்றாமாண்டு) மாணவா்கள், பி.எஸ்சி. துணை மருத்துவப் படிப்புகள் (முதல், இரண்டாமாண்டு) மாணவா்களுக்கு வருகிற ஜூலை 1-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. எம்பிபிஎஸ் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவா்களுக்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும்.

புதுச்சேரி, காரைக்காலில் மையங்களில் படிக்கும் வெளியூா் எம்பிபிஎஸ் மாணவா்கள், தங்களது பயண ஏற்பாடுகள் குறித்து வருகிற 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் ஜிப்மா் நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மாணவா்கள் கரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தியதற்கான படிவத்தை இணையதளத்தில் வருகிற 20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்கள், கரோனா பரிசோதனைக்குப் பிறகே, ஜிப்மா் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.