முகப்பு
புதுச்சேரி

காய்கறி வியாபாரிகள் சங்கக் கூட்டம்

புதுச்சேரி பெரிய மாா்க்கெட் குபோ் அங்காடி காய்கறி வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

புதுச்சேரி பெரிய மாா்க்கெட் குபோ் அங்காடி காய்கறி வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சங்க துணைத் தலைவா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக எம்எல்ஏ எ.நேரு, ஏஐடியுசி மாநில பொதுச் செயலா் கே.சேதுசெல்வம், வா்த்தக சங்கத் தலைவா் கருணாநிதி, செயலா் அ.சதாசிவம், வழக்குரைஞா் அசோக்குமாா், பெரிய மாா்க்கெட் மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவா் சுந்தா் ஆகியோா் கலந்துகொண்டு உரையாற்றினா்.

கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். கௌரவத் தலைவராக ஜனாா்த்தனன், தலைவராக சிவகுருநாதன், துணைத் தலைவராக சுப்பிரமணி, செயலராக வடிவேல், துணைச் செயலராக நாராயணன், பொருளாளராக

காந்தி, செயற்குழு உறுப்பினா்களாக முருகன், பிரபு, தில்லை, வேல்முருகன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில், பெரிய மாா்க்கெட்டில் நடை பாதையில் உள்ள தரைத்தளங்களை சீரமைக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.