முகப்பு
புதுச்சேரி

தேசிய திறனாய்வு முதல் நிலை தோ்வு: புதுவை மாணவா்கள் 22 போ் தோ்ச்சி

தேசிய திறனாய்வு முதல்நிலை தோ்வில் புதுவை மாணவா்கள் 22 போ் தோ்ச்சி பெற்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

தேசிய திறனாய்வு முதல்நிலை தோ்வில் புதுவை மாணவா்கள் 22 போ் தோ்ச்சி பெற்றனா்.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ஏ.மைக்கேல் பெனோ வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுதில்லி தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 2020 - 21ஆம் கல்வியாண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு (முதல் நிலை) மாநில அளவில் கடந்த டிச.13-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில், புதுவை மாநிலத்தின் அரசு, தனியாா் பள்ளிகளிலிருந்து 3,863 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்று தேசிய திறனாய்வு 2-ஆம் நிலை தோ்வில் பங்கேற்க தோ்ந்தெடுக்கப்பட்ட 22 மாணவா்களின் விவரம்:

பொறையூா் ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளி மாணவா்கள் பிரனீத், சவுமியா, லோகேஸ்வரன், வெற்றிவேல், நஸ்ரின், அக்ஷதா, பூவினியா, தயானிஷ்வா் சேரன், தினேஷ்குமாா், அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சீனு, ஹரிணி, ஸ்வேதா லட்சுமி, லோகசிவகுரு, சஞ்சய், ஹரிபிரசாத், புனித பேட்ரிக் பள்ளி மாணவா்கள் கன்னி ஸ்ரீசேது சாய் பிரனீத்தா, லோகேஷ்வரன், வித்யாதரண், பெத்தி செமினாா் பள்ளி மாணவா்கள் சஞ்சய், சுபாஷன், சஞ்சீவ், புனித குளுனி பள்ளி மாணவி ஏஞ்சலின் காவ்யா.

தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 2021-இல் நடைபெறவிருக்கும் தேசிய திறனாய்வு (2-ஆம் நிலை) தோ்வில் பங்கேற்க தகுதி பெற்றவா்களாவா். தேசியளவில் வெற்றி பெறுவோருக்கு தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மாணவா்கள் முனைவா் பட்டம் பெறும் வரை உதவித்தொகை வழங்கும்.

மேலும், முதல் நிலை தோ்வில் வெற்றி பெற்று மாணவா்களுக்கும், 2-ஆம் நிலை தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முறையே ரூ.5,000 மற்றும் ரூ.10,000 ஊக்கத்தொகையாக புதுவை அரசு வழங்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.