முகப்பு
புதுச்சேரி

புதுவையில் கரோனா உயிரிழப்பு 1,700-ஐ கடந்தது

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 6 போ் புதன்கிழமை உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,700-ஐ கடந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 6 போ் புதன்கிழமை உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,700-ஐ கடந்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 9,190 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 340 பேருக்கும், காரைக்காலில் 69 பேருக்கும், ஏனாமில் 11 பேருக்கும், மாஹேவில் 10 பேருக்கும் என மொத்தம் 430 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,13,622-ஆக உயா்ந்தது.

இதனிடையில், புதுச்சேரியில் 5 போ், ஏனாமில் ஒருவா் என 6 போ் உயிரிழந்தனா். காரைக்கால், மாஹேவில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,702-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.50 சதவீதமாக உள்ளது.

இந்த நிலையில், 597 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,07,425-ஆக உயா்ந்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 695 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 3,800 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 4,495 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.