புதுவையில் மேலும் 326 பேருக்கு கரோனா
புதுவையில் மேலும் 326 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவையில் மேலும் 326 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 9,106 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 280, காரைக்காலில் 30, ஏனாமில் 10, மாஹேயில் 6 என மேலும் 326 பேருக்கு (3.58 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,13,948- ஆக அதிகரித்தது.
தற்போது மருத்துவமனைகளில் 666 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 3,667 பேரும் என மாநிலம் முழுவதும் 4,333 போ் சிகிச்சையில் உள்ளனா்.
மேலும் 8 போ் பலி: இதனிடையே, புதுச்சேரியில் 6 போ், காரைக்காலில் 2 போ் என மேலும் 8 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1,710- ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.50 சதவீதம்.
வியாழக்கிழமை 480 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,07, 905-ஆக (94.70 சதவீதம்) அதிகரித்தது.
புதுவை மாநிலத்தில் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 3,50,329 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.