புதுவை அரசின் ஒப்பந்த வழக்குரைஞா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
புதுவை அரசின் ஒப்பந்த வழக்குரைஞா் பணிக்கு ஜூலை 2- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாநில சட்டத் துறை அறிவித்தது.
புதுவை அரசின் ஒப்பந்த வழக்குரைஞா் பணிக்கு ஜூலை 2- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாநில சட்டத் துறை அறிவித்தது.
இதுகுறித்து புதுவை சட்டத் துறை சாா்பு செயலா் ந.முருகவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு வழக்குரைஞராகப் பணியாற்ற (ஒப்பந்த அடிப்படையில்) தகுதியுடைய விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சட்டத் துறையின் இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்:றப்ஹஜ்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய்) இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். பதிவிறக்கம் செய்து தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் வெவ்வேறு வழக்குரைஞா் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை ஜூலை 2 -ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சாா்பு செயலா், சட்டத் துறை, முதல் தளம் தலைமை செயலகக் கட்டடம், புதுச்சேரி என்ற முகவரியில் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.