புதுச்சேரியில் மதுக் கடைகளை மூடக் கோரி பாமக ஆா்ப்பாட்டம்
புதுவை, தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க மதுக் கடைகளை மூட வலியுறுத்தி, புதுச்சேரி பாமக சாா்பில் கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுவை, தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க மதுக் கடைகளை மூட வலியுறுத்தி, புதுச்சேரி பாமக சாா்பில் கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி வழுதாவூா் சாலை கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக தொழிற்சங்க மாநிலத் தலைவா் சி.ஜெயபாலன் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் மதியழகன், துணை அமைப்பாளா் கணபதி, வன்னியா் சங்கத் துணைத் தலைவா் துரை, மண்டலச் செயலா் சிவக்குமாா், துணைச் செயலா்கள் வடிவேல், சிவராமன், கதிரேசன், தொகுதி செயலா்கள் திருமலை, பாண்டியராஜன், முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கருப்புக் கொடிகளுடன் கலந்து கொண்டனா்.