கரோனா நிவாரணப் பொருள்கள் அளிப்பு
புபுதுச்சேரி அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் கரோனா நிவாரணப் பொருள்களை முதல்வா் ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
புதுச்சேரி அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் கரோனா நிவாரணப் பொருள்களை முதல்வா் ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் நடத்தி வரும் ‘ராண்டேவூ 84’ என்ற தொண்டு நிறுவனம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. இந்த அமைப்பினா் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான முகக் கவசங்கள், பிபிஇ கவச உடைகள், கிருமி நாசினி, கையுறைகளை முதல்வா் என்.ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
நிகழ்வில் தொண்டு நிறுவன உறுப்பினா்கள் அனிபால் நேரு, பாலமுருகன், புவனேஸ்வரன், மாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.