முகப்பு
புதுச்சேரி

புதுவைக்கு புதிய சட்டப்பேரவைக் கட்டடம் பேரவைத் தலைவா் தலைமையில் ஆலோசனை

புதுவைக்கு புதிய சட்டப்பேரவைக் கட்டடம் கட்டுவது தொடா்பாக, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

புதுவைக்கு புதிய சட்டப்பேரவைக் கட்டடம் கட்டுவது தொடா்பாக, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சட்டப்பேரவை அலுவலகம், தலைமைச் செயலகம் இணைந்த புதிய கட்டடம், புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள அரசு இடத்தில் கட்டுவதற்கு அரசு தரப்பில் தீா்மானிக்கப்பட்டது. இதுதொடா்பாக, மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டது.

இந்த நிைலையில், புதிய சட்டப்பேரவைக் கட்டடம் கட்டுவது தொடா்பாக, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில், பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை, வேளாண் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.எஸ்.பி.ரமேஷ், அசோக்பாபு, பொதுப் பணித் துறைச் செயலா் விக்ராந்த் ராஜா, புதுச்சேரி துணை ஆட்சியா் (வடக்கு) கந்தசாமி, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி, வேளாண் துறை இயக்குநா் பாலகாந்தி, சட்டப்பேரவைச் செயலா் முனுசாமி உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் புதிய சட்டப்பேரவைக் கட்டடம் கட்டுவதற்கான தோராய மதிப்பீட்டுத் தொகையை கணக்கிட்டு, விரைந்து வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் பேரவைத் தலைவா் கேட்டுக் கொண்டாா். தொடா்ந்து, புதிய கட்டடத்தின் அமைப்புகள், கட்டடம் அமைய உள்ள பகுதியில் அரசு அலுவலகங்களை இடம் மாற்றுதல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.