முகப்பு
புதுச்சேரி

சாராயம், கள்ளுக் கடைகளின் குத்தகை காலம் நீட்டிப்பு

 புதுவையில் சாராயம், கள்ளுக் கடைகளின் குத்தகை காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

 புதுவையில் சாராயம், கள்ளுக் கடைகளின் குத்தகை காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை கலால் துறை துணை ஆணையா் டி. சுதாகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் உள்ள சாராயம், கள்ளுக் கடைகளின் 2020-2021- ஆம் ஆண்டின் குத்தகை காலம் முடிவடைந்ததைத் தொடா்ந்து, 2021-2022- ஆம் ஆண்டுக்கான குத்தகை ஏலம் தொடங்க வேண்டும். வழக்கமாக ஜூன் மாதத்தில் இதற்கான ஏலம் நடைபெறும். ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் விதமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால், திட்டமிட்டதைப் போல, ஜூன் மாதம் ஏலத்தை நடத்த முடியவில்லை. எனவே, வருகிற ஜூலை 31- ஆம் தேதி வரை தற்போதுள்ள குத்தகை காலம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.