புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் போராட்டம்
புதுச்சேரியில் சென்னை உயா் நீதிமன்றக் கிளையை அமைக்க வலியுறுத்தி, வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் சென்னை உயா் நீதிமன்றக் கிளையை அமைக்க வலியுறுத்தி, வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டத்தில், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், புதுச்சேரியில் உயா் நீதிமன்றக் கிளையை அமைக்க வேண்டும், வழக்குரைஞா் சேம நல நிதி ரூ. 5 கோடியை புதுவை துணைநிலை ஆளுநா் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்ச் 1-ஆம் தேதி நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, திங்கள்கிழமை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் முத்துவேல் தலைமையில், புதுச்சேரியில் உள்ள 17 நீதிமன்றங்களில் பணிபுரியும் 1,000-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள், நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் தங்களது அறைகளில் அமா்ந்திருந்தனா். வழக்குரைஞா்களின் போராட்டத்தால், வழக்கு விசாரணை பணிகள் பாதிக்கப்பட்டன.