முகப்பு
புதுச்சேரி

புதுவை பாமகவினா் விருப்ப மனு அளிப்பு

புதுவையில் பாமக சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட விரும்பும் அந்தக் கட்சியினரிடமிருந்து திங்கள்கிழமை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

புதுவையில் பாமக சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட விரும்பும் அந்தக் கட்சியினரிடமிருந்து திங்கள்கிழமை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

புதுச்சேரி கவுண்டம்பாளையம் மாநில வன்னியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாமக மாநில அமைப்பாளாா் கோ.தன்ராஜ் தலைமையில், மாநில அமைப்புச் செயலா் செல்வக்குமாா் முன்னிலையில், புதுவை மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

முதல் நாளில் புதுச்சேரி பாகூா், மங்கலம், மண்ணாடிப்பட்டு, அரியாங்குப்பம், மணவெளி உள்ளிட்ட 15 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றனா். 10 போ் விருப்ப மனுக்களை வழங்கினா்.

மாா்ச் 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என்றும், பெறப்பட்ட மனுக்கள் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசீலனை செய்து அறிவிக்கப்படும் எனவும் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.