புதுவை: வாக்குச் சாவடிகளுக்குவாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
புதுவையில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.
புதுவையில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.
நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அதிகாரியுமான பூா்வா காா்க் தலைமை வகித்தாா். இதில், அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரமுகா்கள், தோ்தல் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
நிகழ்வில், இந்திய தோ்தல் ஆணையத்தின் மென்பொருளைப் பயன்படுத்தி, கணினி முறையில் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அந்த வகையில், புதுச்சேரி, மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள 25 தொகுதிகளுக்கும் 1,603 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1,724 வாக்காளா் சரிபாா்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் (விவி-பாட்) ஒதுக்கீடு செய்யப்பட்டன.