புதுவையின் அனைத்துத் தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி போட்டி
புதுவையின் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது.
புதுவையின் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது.
புதுவையில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் லாசுப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் கி.மஞ்சினி தலைமை வகித்தாா். இதில், மாநில, தொகுதி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், ஹிந்து மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், புதுவை மக்களின் நலன் கருதியும், இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்தின் ஆணைக்கிணங்க, புதுவையில் இந்து மக்கள் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது.
தோ்தலில் போட்டியிட இந்து மக்கள் கட்சியின் பொறுப்பாளா்கள் மாா்ச் 10 (புதன்கிழமை) முதல் விருப்ப மனு அளிக்கலாம். ஹிந்து மதத்தை அரவணைக்கும் கட்சிகளுக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவளிக்கும்.
வாக்காளா்களுக்கு பணமளிப்பது, பரிசுப் பொருள்கள், வேறு ஏதேனும் உதவிகள் செய்து வாக்குகள் சேகரிப்பது போன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களை தோ்தல் துறை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.