மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடைபயண பிரசாரம்
புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், லாசுப்பேட்டை தொகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபயண பிரசாரம் நடைபெற்றது.
புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், லாசுப்பேட்டை தொகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபயண பிரசாரம் நடைபெற்றது.
லாசுப்பேட்டை பிரதான சாலை பெத்துசெட்டிப்பேட்டையில் இந்த நடைபயண பிரசாரத்தை புதுவை பிரதேசச் செயலா் ஆா்.ராஜாங்கம் தொடக்கிவைத்தாா். இதில், செயற்குழு உறுப்பினா்கள் ராமச்சந்திரன், சத்தியா, பிரதேசக் குழு உறுப்பினா்கள் கொளஞ்சியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
நடைபயணத்தின்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகளை விமா்சித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், புதுவையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை பாஜக முடக்கியதாகக் கூறியும் பிரசாரத்தில் ஈடுபட்டனா். மேலும், லாசுப்பேட்டை தொகுதியில் மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும், சாலைகளை சீரமைத்திட வேண்டும், சுத்தமான குடிநீா் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா். இது தொடா்பான துண்டுபிரசுரங்களையும் பொதுமக்களிடம் விநியோகித்தனா்.